ஆவநாழி மென்னிதழில் வெளியான ஓவியர் ஜீவா அவர்களின் பிஜய் பிஸ்வால் உடனான நேர்காணல்
ஆங்கில உரையாடலின் தமிழ் வடிவம் எனது
ஆங்கில உரையாடலின் தமிழ் வடிவம் எனது
ஈர ப்ளாட்ஃபார்ம்களில் பிரதிபலிக்கும் பேரோவியங்கள் நேர்காணல் - ஓவியர் ஜீவா தமிழாக்கம் - அரவிந்த் வடசேரி ஒடிசாவைச் சேர்ந்தவர் பிஜய் பிஸ்வால். இந்தியா மட்டுமல்லாது உலகம் நன்கறிந்த ஓவியர். தன் இந்திய ரயில்வே பணியின் தாக்கத்தில் ஈர ரயில்வே ப்ளாட்ஃபாரங்களை பெருமளவில் வரைந்து பெரும் புகழ் பெற்றவர். ஓவியத்துக்காக வேலையிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று முழுநேர ஓவியராகத் திகழ்பவர். அவருடனான ஓவியர் ஜீவாவின் நேர்காணல்... நான் சிறுவயது முதலே ஓவியம் வரைந்து வருகிறேன். சரியாக எவ்வளவு வயதில் வரையத் தொடங்கினேன் என்பதைக் குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை. கடவுள் என்னை இந்த உலகிற்கு அனுப்பி வைத்தபொழுதே அது என்னுள் இருந்திருக்க வேண்டும். இந்த உலகினை இயலும் அளவு வண்ணங்களால் தீட்டவே கடவுள் என்னைப் படைத்தாரோ என்னவோ! ஐந்து வயது இருக்கையில் படம் வரைந்தது நினைவில் உள்ளது. ஆம், அம்மாவின் அடுப்படியில் இருக்கும் கரித்துண்டுகளும், எங்கள் வகுப்பில் கரும்பலகையின் கீழே வீசியெறியப்படும் சாக்பீஸ் துண்டுகளும்தான் என் பொக்கிஷங்கள். என் வீட்டு நிலமும் சுவர்களும்தான் ...