Flash fiction magazine ல் Simon Hole அவர்களின் Wild side குறுங்கதையின் என் மொழியாக்கம்.

கிளர்ச்சி

குறுங்கதை

அசல் : Simon Hole

மொழிமாற்றம் : அரவிந்த் வடசேரி

'நீ எதையுமே திருத்தமாகத் தான் செய்வாய் இல்லையா? ஒரே ஒரு முறை பைத்தியக்காரத்தனமாக ஏதாவது செய்ய மாட்டாயா?'

என் வாழ்விலிருந்து வெளியேறும் முன் இது தான் அவன் கடைசியாய் என்னிடம் சொன்னது. அவன் சொன்னது சரியாக இருக்கலாம். நான் கொஞ்சம் அதிகமாகவே நேரான ஆள் தான். மிகச் சில தருணங்களிலாவது நான் சிறிது நெகிழ்ந்து சில சாகசங்களை மேற்கொள்ள வேண்டும். என் மனதை கட்டவிழ்த்து ஓடவிட நேரம் வந்து விட்டது போலும்.

எனவே தான் இப்பொழுது இங்கு நிற்கிறேன், ஒரு பாய்ச்சலுக்கு தயாராக, கட்டுப்பாடுகளை தகர்த்தெறிய, விதிகளை மீற.

இது மிகவும் கிளர்ச்சியூட்டுவதாக இருப்பதை ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும். இதயம் துடிக்க நான் அந்த கம்பளி ஆடையினை துவைப்பானில் வீசினேன், அதனுடன் இணைந்த குறிப்பு அறிவுறுத்துகிறது, "உலர்சலவை மட்டும்"

Comments

Popular posts from this blog

ஜெயமோகன் அவர்களின் சிறுகதை இன்வெர்னெஸ் கட்டுடைத்தல்

நான் யார்? - ஸ்ரீ ரமணர் அருளியதன் எனது எளிய தமிழாக்கம்

உலகத் தாய்மொழி நாள் உரை