மாத்ருபூமி ஆழ்ச்சப்பதிப்பில் (மலையாள வார இதழ்) பள்ளி கல்லூரி மாணாக்கர்களுக்கான பகுதி உள்ளது. இது பல நேரங்களில் நல்ல படைப்புகளைத் தாங்கி வரும். ஒரு கல்லூரி மாணவியின் என்னைக் கவர்ந்த கவிதையின் என் மொழியாக்கம் இது.

உப்பும் இனிப்பும்

சரிதா ஸ்ரவண்

தமிழாக்கம் : அரவிந்த் வடசேரி

'குழம்பில் உப்பு போதாது
டீயில் இனிப்பும்'
சொல்லி சொல்லி
என் வாய் வலித்தது தான் மிச்சமென அவன்.
அவனுக்கு தெரியவில்லை
உப்பு சப்பற்ற ஒரு வாழ்க்கை பற்றி.
நீ ஒரு முட்டாள்!
ஒரு சொல்லும் ஒரு புன்சிரிப்பும்
உப்பும் இனிப்புமாக்கி
ஊறுகாயும் தயிர்சாதமும் சாப்பிடத் தெரிந்திருந்தால்
இனிப்பாக இருந்திருக்கும் வாழ்க்கை
உனக்கும் எனக்கும்.
இனி உப்பும் இனிப்பும்
கூடியும் குறைந்தும்
நிலை தடுமாற
துப்பவும் முடியாமல்
விழுங்கவும் முடியாமல்
வாழ்ந்து வாழ்ந்து
மாய்ந்து போவோம் நாம்.

Comments

Popular posts from this blog

ஜெயமோகன் அவர்களின் சிறுகதை இன்வெர்னெஸ் கட்டுடைத்தல்

உலகத் தாய்மொழி நாள் உரை

மொழிபெயர்ப்புக் கதை - ஆப்பிள்கள் சிவக்கும் இடம்