இருவாட்சி இதழில் வெளியான என் சிறுகதை. ஓவியம் : ஜீவா அவர்கள்
ஏறு தழுவுதல் சிறுகதை-அரவிந்த் வடசேரி ஓவியம் -ஜீவா மணி ஆறைத் தாண்டி விட்டது. மற்ற வண்டிகளிலும் வியாபாரம் மந்தமாகத் தான் இருந்தது. வெகு நாட்களாக இருக்கும் சிவக்குமார் அண்ணன் வண்டியினைச் சுற்றி மட்டும் வழக்கம் போல் கொஞ்சம் வாடிக்கையாளர்கள் நின்றிருந்தார்கள். இன்னும் இரண்டு மணி நேரத்திற்கு மேல் இருக்கிறது கடை அடைக்க. நேற்றை விடவும் இன்று வியாபரம் குறையாமல் இருந்தாலே போதும். வண்டி தள்ளத் துவங்கி ஒரு மாதம் கடந்து விட்டது. ஏதோ தட்டுத் தடுமாறி நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கிறது. அதற்கு முன் ப்ரூக்ஸில் தான் வேலை. கொரோனா காரணமாக மால் மூடப்பட்ட பொழுது இவ்வளவு நாள் நீடிக்கும் என நினைக்கவில்லை. ஒரு வாரம் அல்லது இரண்டு வாரத்தில் திறந்து விடுவார்கள் என்று தான் நம்பியிருந்தார்கள். முதல் மாதம் வேலை செய்த நாட்களுக்கான சம்பளத்தை விட கொஞ்சம் அதிகமாகத் தான் தந்தார்கள். பிறகு அவர்களும் தரவில்லை, நானும் கேட்கவில்லை. இரண்டு மாதம் முன் வரை, எப்படியோ, இலவச உதவிகள் கொண்டு தாக்கு பிடிக்க முடிந்தது. பிறகும் நிலைமை சீராகும் வாய்ப்பே தெரியாததால் ஏதாவது செய்தே ஆக வேண்டும் எ...