Posts

Showing posts with the label ஆங்கிலம்

ஆவநாழி மென்னிதழில் வெளியான ஓவியர் ஜீவா அவர்களின் பிஜய் பிஸ்வால் உடனான நேர்காணல்
ஆங்கில உரையாடலின் தமிழ் வடிவம் எனது

Image
ஈர ப்ளாட்ஃபார்ம்களில் பிரதிபலிக்கும் பேரோவியங்கள் நேர்காணல் - ஓவியர் ஜீவா   தமிழாக்கம் - அரவிந்த் வடசேரி    ஒடிசாவைச் சேர்ந்தவர் பிஜய் பிஸ்வால். இந்தியா மட்டுமல்லாது உலகம் நன்கறிந்த ஓவியர். தன் இந்திய ரயில்வே பணியின் தாக்கத்தில் ஈர ரயில்வே ப்ளாட்ஃபாரங்களை பெருமளவில் வரைந்து பெரும் புகழ் பெற்றவர். ஓவியத்துக்காக வேலையிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று முழுநேர ஓவியராகத் திகழ்பவர். அவருடனான ஓவியர் ஜீவாவின் நேர்காணல்...    நான் சிறுவயது முதலே ஓவியம் வரைந்து வருகிறேன். சரியாக எவ்வளவு வயதில் வரையத் தொடங்கினேன் என்பதைக் குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை. கடவுள் என்னை இந்த உலகிற்கு அனுப்பி வைத்தபொழுதே அது என்னுள் இருந்திருக்க வேண்டும். இந்த உலகினை இயலும் அளவு வண்ணங்களால் தீட்டவே கடவுள் என்னைப் படைத்தாரோ என்னவோ! ஐந்து வயது இருக்கையில் படம் வரைந்தது நினைவில் உள்ளது. ஆம், அம்மாவின் அடுப்படியில் இருக்கும் கரித்துண்டுகளும், எங்கள் வகுப்பில் கரும்பலகையின் கீழே வீசியெறியப்படும் சாக்பீஸ் துண்டுகளும்தான் என் பொக்கிஷங்கள். என் வீட்டு நிலமும் சுவர்களும்தான் ...

Flash fiction magazine ல் Simon Hole அவர்களின் Wild side குறுங்கதையின் என் மொழியாக்கம்.

Image
கிளர்ச்சி குறுங்கதை அசல் : Simon Hole மொழிமாற்றம் : அரவிந்த் வடசேரி 'நீ எதையுமே திருத்தமாகத் தான் செய்வாய் இல்லையா? ஒரே ஒரு முறை பைத்தியக்காரத்தனமாக ஏதாவது செய்ய மாட்டாயா?' என் வாழ்விலிருந்து வெளியேறும் முன் இது தான் அவன் கடைசியாய் என்னிடம் சொன்னது. அவன் சொன்னது சரியாக இருக்கலாம். நான் கொஞ்சம் அதிகமாகவே நேரான ஆள் தான். மிகச் சில தருணங்களிலாவது நான் சிறிது நெகிழ்ந்து சில சாகசங்களை மேற்கொள்ள வேண்டும். என் மனதை கட்டவிழ்த்து ஓடவிட நேரம் வந்து விட்டது போலும். எனவே தான் இப்பொழுது இங்கு நிற்கிறேன், ஒரு பாய்ச்சலுக்கு தயாராக, கட்டுப்பாடுகளை தகர்த்தெறிய, விதிகளை மீற. இது மிகவும் கிளர்ச்சியூட்டுவதாக இருப்பதை ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும். இதயம் துடிக்க நான் அந்த கம்பளி ஆடையினை துவைப்பானில் வீசினேன், அதனுடன் இணைந்த குறிப்பு அறிவுறுத்துகிறது, "உலர்சலவை மட்டும்"

கவிஞர் மாதவிக்குட்டியின் ஆங்கிலக் கவிதையின் என் மொழியாக்கம்

Image
நடுத்தர வயதினள் ஆங்கிலத்தில் - கவிஞர் மாதவிக்குட்டி தமிழாக்கம் : அரவிந்த் வடசேரி எப்பொழுது நண்பர்களாக இருந்த உங்கள் குழந்தைகள் கடு கடுக்கும் முகமும் கருணையற்ற நாவும் கொண்ட விமர்சகர்களாக மாறினரோ, அப்பொழுது நீங்கள் நடுத்தர வயதினள். இப்பொழுது அவர்கள் கூடுடைத்து வெளியேறின கூட்டுப்புழுக்களின் முகத்திலறையும் முதிர்ச்சியின் பேரழகு, உங்களை அவர்களுக்கு தேவையில்லை, தேனீர் தயாரிக்கவும் உடுப்புகளை சலைவை செய்யவும் தவிர. உங்களுக்கோ அவர்கள் எப்பொழுதும் போல மிகவும் வேண்டியவர்களாக இருக்கிறார்கள், குறிப்பாக இப்பொழுது. தனித்து விடப்பட்ட நீங்கள், அவர்களின் புத்தகங்களையும் பொருட்களையும் தடவி இரகசியமாக கொஞ்சம் அழுகிறீர்கள். எப்பொழுதோ நீங்கள் நள்ளிரவில் வரைந்தளித்த கானக விருந்துக்கான அணில்களின் தங்க நிற அழைப்பிதழ் கண்டு, 'வாழ்க்கை முழுவதும் கனவுலகத்திலேயே வாழ்ந்து விட்டீர்கள், இப்பொழுதாவது விழித்துக் கொள்ளுங்கள். அம்மா, உங்களுக்கு வயதாகி விட்டது' என எப்பொழுது வெறுப்புடன் உங்கள் மகன் கத்துகிறானோ, அப்பொழுது நீங்...

நோபெல் பரிசு பெற்ற எழுத்தாளர் Louise Gluck அவர்களின் A fantasy எனும் கவிதை என் மொழிமாற்றத்தில்

Image
ஒரு கனவு லூயிஸ் க்ளக் தமிழாக்கம் : அரவிந்த் வடசேரி நான் உங்களுக்கு ஒன்று சொல்கிறேன்: தினமும் யாராவது இறக்கிறார்கள். அது ஒரு ஆரம்பம் மட்டும் தான். ஒவ்வொரு நாளும் மயானங்களில் புதிதாக விதவைகள் பிறக்கிறார்கள், புது அனாதைகள். அவர்கள் தலையினை கையில் தாங்கி அமர்ந்திருக்கிறார்கள், தங்கள் புது வாழ்வினை முடிவு செய்ய முயன்றபடி. அவர்களில் சிலர் முதல் முறையாக வருகிறார்கள் மயானத்திற்கு. அவர்கள் அழக்கூட பயந்தவர்களாயிருக்கிறார்கள், சில நேரங்களில் அழாமலிருப்பதற்கும். யாரோ அவர்களின் காதில் கிசுகிசுக்கிறார்கள் அடுத்ததாக என்ன செய்ய வேண்டுமென்று, சில மந்திரங்களை உச்சரிக்க அல்லது திறந்திருக்கும் குழியில் ஒரு பிடி மண் அள்ளிப்போட. அதன் பிறகு அனைவரும் அவள் வீட்டிற்கு வருகிறார்கள், திடீரென வீடு முழுக்க ஆட்கள் நிறைந்திருக்கிறார்கள். விதவை கட்டிலில் அமர்ந்திருக்கிறாள், வெகு பாங்காக, வந்தவர்கள் வரிசையாக அவளிடம் வரத் தோதாக, சிலர் அவள் கையினை பற்றிக்கொள்கின்றனர், சிலர் மென்மையாக அணைக்கின்றனர். அவளிடம் அனைவருக்கும் சொல்ல ஏதோ ஒன்றிருக்கிறது, நன்றி, உதவிக்கு ந...