Posts

Showing posts with the label நேர்காணல்

ஆவநாழி மென்னிதழில் வெளியான ஓவியர் ஜீவா அவர்களின் பிஜய் பிஸ்வால் உடனான நேர்காணல்
ஆங்கில உரையாடலின் தமிழ் வடிவம் எனது

Image
ஈர ப்ளாட்ஃபார்ம்களில் பிரதிபலிக்கும் பேரோவியங்கள் நேர்காணல் - ஓவியர் ஜீவா   தமிழாக்கம் - அரவிந்த் வடசேரி    ஒடிசாவைச் சேர்ந்தவர் பிஜய் பிஸ்வால். இந்தியா மட்டுமல்லாது உலகம் நன்கறிந்த ஓவியர். தன் இந்திய ரயில்வே பணியின் தாக்கத்தில் ஈர ரயில்வே ப்ளாட்ஃபாரங்களை பெருமளவில் வரைந்து பெரும் புகழ் பெற்றவர். ஓவியத்துக்காக வேலையிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று முழுநேர ஓவியராகத் திகழ்பவர். அவருடனான ஓவியர் ஜீவாவின் நேர்காணல்...    நான் சிறுவயது முதலே ஓவியம் வரைந்து வருகிறேன். சரியாக எவ்வளவு வயதில் வரையத் தொடங்கினேன் என்பதைக் குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை. கடவுள் என்னை இந்த உலகிற்கு அனுப்பி வைத்தபொழுதே அது என்னுள் இருந்திருக்க வேண்டும். இந்த உலகினை இயலும் அளவு வண்ணங்களால் தீட்டவே கடவுள் என்னைப் படைத்தாரோ என்னவோ! ஐந்து வயது இருக்கையில் படம் வரைந்தது நினைவில் உள்ளது. ஆம், அம்மாவின் அடுப்படியில் இருக்கும் கரித்துண்டுகளும், எங்கள் வகுப்பில் கரும்பலகையின் கீழே வீசியெறியப்படும் சாக்பீஸ் துண்டுகளும்தான் என் பொக்கிஷங்கள். என் வீட்டு நிலமும் சுவர்களும்தான் ...

ஆவநாழி மென்னிதழில் வெளியான ஓவியர் சுனில் பூக்கோட் அவர்களின் நேர்காணல் - மலையாள உரையாடலின் தமிழ் வடிவம் எனது

Image
ஞாபகங்களில் நனையும் தூரிகை நேர்காணல் - ஓவியர் ஜீவா   தமிழாக்கம் - அரவிந்த் வடசேரி சுனில் பூக்கோட் தன் வித்தியாசமான, தனித்துவமிக்க ஓவியங்களால் கேரளத்தைப் பதிவு செய்யும் ஓவியர். அவரோடு ஓர் உரையாடல்... ஓவியத்தில் ஆர்வம் வந்தது எப்படி? உங்கள் குடும்பத்தில் வேறு ஓவியர்கள் யாரும் உண்டா? நான் ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்தவன். எனது தந்தை ஒரு பேருந்து பணியாளர். அம்மா இல்லத்தரசி. கலை சார்ந்த ஏதாவது ஒரு தொடர்பு என்று சொன்னால் அது என் அம்மாவின் குடும்பத்திலிருந்து தான் எனச் சொல்ல முடியும். என் அம்மாவின் அப்பா கட்டிடக் கலைஞர். அந்தக் காலத்தில் பள்ளிவாசல்கள் கட்டுவதில் அவர் பெயர் பெற்றிருந்தார். மெருவம்பாயி பள்ளிவாசல் போன்றவற்றை அவர்தான் கட்டினார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். எனக்குத் தெரிந்து என் அப்பாவின் குடும்பத்தில் கலைஞர்கள் யாரும் இல்லை. ஒரு வேளை மரபணுக்கள் வழி என் முன்னோர்களின் ஈடுபாடு எனக்கு கடத்தப்பட்டிருக்கலாம். நீங்கள் ஓவியம் கற்றுக்கொண்டது குறித்த பகிர்வுகள்... மற்றும் உங்களைக் கவர்ந்த ஓவிய ஆசிரியர்கள்? சிறு வயது முதலே எனக்குப்...