Posts

Showing posts with the label கவிதை

ஆவநாழி இதழில் நான் எழுதிய நூல் அறிமுகம் - குமரகுரு அன்பு அவர்களின் ஒரு உபரியின் கவிதைகள் - கவிதைத் தொகுப்பு

Image
ஒரு உபரியின் கவிதைகள் குமரகுரு அன்பு நூல் அறிமுகம் - அரவிந்த் வடசேரி 64 பக்கங்கள் காக்கை பிரதிகள் வெளியீடு முதற் பதிப்பு ஜூன் 2020 விலை ரூ 60. வாழ்வெங்கும் விரவியிருக்கும் கீழ்மையையும் சுரண்டலையும் காணும் ஒரு சாதாரண மனிதனின் எதிர்வினை எப்படி இருக்க முடியும். அவலங்களை மறுத்து வாழ்வின் மேலானதெனக் கருதும் சில தருணங்களின் நிழலில் எதிர்காலம் குறித்த நம்பிக்கை எனும் போதையில் நிகழ்வினை மறந்து கனவுகள் காணலாம். இல்லையெனில், உண்மையின் வேள்வித் தீயின் உட்புகுந்து அழிக்க முனைந்து தானும் அழிந்து போகலாம். ஆனால் இவ்விரண்டு தேர்வுகளுமே வாழ்வின் இரு முரண் எல்லைகள். இந்த விருப்பங்கள் சாதாரணனுக்கு கைகூடுவது இல்லை. வாழ்வின் நிதர்சனங்களோடு சமரசம் புரிந்து அதன் அழுத்ததில் வாழ்ந்து மடிவது தான் அவனுக்கு வாய்க்கிறது. ஆனால் ஒரு படைப்பாளி இந்த அழுத்தத்தினைத் தன் கலைகளில் வெளிப்படுத்தி ஆசுவாசம் கொள்கிறான். குமரகுரு அன்புவின் 'ஒரு உபரியின் கவிதைகள்' இது போன்றவோர் இயலாமையின் வெளிப்பாடாக, எப்படியாவது இந்நிலையினை மாற்றும் வழி விரும்பி அலையும் ஆன்மாவின் குரலாக ஒலிக்கிறது. இந்த உலகில் ...
Image
மாத்ருபூமி ஆழ்ச்சப்பதிப்பில் (மலையாள வார இதழ்) பள்ளி கல்லூரி மாணாக்கர்களுக்கான பகுதி உள்ளது. இது பல நேரங்களில் நல்ல படைப்புகளைத் தாங்கி வரும். ஒரு கல்லூரி மாணவியின் என்னைக் கவர்ந்த கவிதையின் என் மொழியாக்கம் இது. உப்பும் இனிப்பும் சரிதா ஸ்ரவண் தமிழாக்கம் : அரவிந்த் வடசேரி 'குழம்பில் உப்பு போதாது டீயில் இனிப்பும்' சொல்லி சொல்லி என் வாய் வலித்தது தான் மிச்சமென அவன். அவனுக்கு தெரியவில்லை உப்பு சப்பற்ற ஒரு வாழ்க்கை பற்றி. நீ ஒரு முட்டாள்! ஒரு சொல்லும் ஒரு புன்சிரிப்பும் உப்பும் இனிப்புமாக்கி ஊறுகாயும் தயிர்சாதமும் சாப்பிடத் தெரிந்திருந்தால் இனிப்பாக இருந்திருக்கும் வாழ்க்கை உனக்கும் எனக்கும். இனி உப்பும் இனிப்பும் கூடியும் குறைந்தும் நிலை தடுமாற துப்பவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் வாழ்ந்து வாழ்ந்து மாய்ந்து போவோம் நாம்.

ஆவநாழி இதழில் நான் எழுதிய நூல் அறிமுகம் - குமரகுரு அன்பு அவர்களின் மணல் மீது வாழும் கடல் - கவிதைத் தொகுப்பு

Image
மணல் மீது வாழும் கடல் - கவிதைகள் குமரகுரு அன்பு - அகநாழிகை பதிப்பகம் நூல் அறிமுகம் - அரவிந்த் வடசேரி குமரகுரு அன்புவின் முதல் கவிதைத் தொகுப்பு ‘மணல் மீது வாழும் கடல்’. உலகின் துன்பங்களைக் கண்டு அதிர்ந்த சித்தார்த்தன் அதற்கான தீர்வினைத் தேடி துறவறம் மேற்கொண்டு தேடினான். ஆனால் கவிஞனுக்கு விதிக்கப்பட்டது அத்துயரங்களைத் தன் கவிதைகளில் பிரதிபலித்து, தன்னோடு சேர்ந்து வாசகனையும் இவ்வுலகத்தினையும் தேடத் தூண்டுவதுதானே. தன் கண் முன்னே தோன்றும் வாழ்வின் பல்வேறு துயரங்களையும் சமூக நலம் சார்ந்த அவதானிப்புகளையும் கவிதைகளின் கருவாக்கியுள்ளார் கவிஞர். அவரே சொல்வது போல் காத்திருப்பின் மௌனத்தினை உடைக்கும் கடவுச் சொல் தேடும் முயற்சிகள் இந்தக் கவிதைகள். // கடவுச்சொல் காத்திருந்த நாட்களின் மௌனம் உடைக்கும் கடவுச்சொல் தெரியாமல் இன்னும் விழுங்கிக் கொண்டிருக்கிறேன் எண்ணங்களை எங்கிருந்தோ வந்து என் சொற்களை என் எழுத்துக்களை என் சத்தங்களை தின்றுவிட்டு கடவுச்சொல்லை போகும் வழியில் துப்பிச் செல்கிறாய்.// குறையாத நம்பிக்கையின் குரலாக ஒலிக்கும் ‘தவக்களைய பாம்பு முழுங்கு...

கொடியிறக்குதல் - கவிதை?

Image
கொடியிறக்குதல் அரவிந்த் வடசேரி வெய்யிலில் காயந்திருந்த நுழைவாயிலின் பூட்டு திறக்கச் சற்று தாமதம் செய்தது. அமைச்சர் வருகையினையொட்டி வரையப்பட்ட வெண்ணிற வட்டங்கள் மறையத் துவங்கியிருந்தன. ஏதோ ஆபத்து விரட்டி வர ஒரு காட்டின் அனைத்து விலங்குகளும் விரைந்தோடியதை நினைவூட்டின மணலின் மீதிருந்த தடங்கள். அறுந்து கிடந்த தோரணம் ஒன்றினை அவிழ்த்து சுருட்டினான், பிடிப்பு தவறி தரையில் கிடந்த கொடி ஒன்றினை ஜேபியிலிட்டான், முக்கிய விருந்தினர் விட்டுப்போன பொன்னாடையின் நெகிழிப் பையினை பொறுப்பாய் எடுத்து குப்பையிலிட்டான். காற்றடங்கியதால் பறந்து களைத்தது போல் சுரத்தற்று மடங்கிக் கிடந்தது கொடி. எக்கி நின்று கொடிக்கயிற்றின் சுற்றவிழ்த்து சுண்டி நேர் செய்து கீழ் இறக்க தொக்கி நின்ற மலர் ஒன்று உச்சியில் உதிர்ந்தது. சிலிர்த்துப் போனது போல் சிறகடித்த புறாவின் கரவொலி. கயிற்றுடன் மடித்த கொடியினை பொதிந்து வாயிலைப் பூட்டி வெளியேற வீதி விளக்குகளின் ஒளியில் அவன் நிழல் மட்டும் துணையாக வந்தது.

கவிஞர் மாதவிக்குட்டியின் ஆங்கிலக் கவிதையின் என் மொழியாக்கம்

Image
நடுத்தர வயதினள் ஆங்கிலத்தில் - கவிஞர் மாதவிக்குட்டி தமிழாக்கம் : அரவிந்த் வடசேரி எப்பொழுது நண்பர்களாக இருந்த உங்கள் குழந்தைகள் கடு கடுக்கும் முகமும் கருணையற்ற நாவும் கொண்ட விமர்சகர்களாக மாறினரோ, அப்பொழுது நீங்கள் நடுத்தர வயதினள். இப்பொழுது அவர்கள் கூடுடைத்து வெளியேறின கூட்டுப்புழுக்களின் முகத்திலறையும் முதிர்ச்சியின் பேரழகு, உங்களை அவர்களுக்கு தேவையில்லை, தேனீர் தயாரிக்கவும் உடுப்புகளை சலைவை செய்யவும் தவிர. உங்களுக்கோ அவர்கள் எப்பொழுதும் போல மிகவும் வேண்டியவர்களாக இருக்கிறார்கள், குறிப்பாக இப்பொழுது. தனித்து விடப்பட்ட நீங்கள், அவர்களின் புத்தகங்களையும் பொருட்களையும் தடவி இரகசியமாக கொஞ்சம் அழுகிறீர்கள். எப்பொழுதோ நீங்கள் நள்ளிரவில் வரைந்தளித்த கானக விருந்துக்கான அணில்களின் தங்க நிற அழைப்பிதழ் கண்டு, 'வாழ்க்கை முழுவதும் கனவுலகத்திலேயே வாழ்ந்து விட்டீர்கள், இப்பொழுதாவது விழித்துக் கொள்ளுங்கள். அம்மா, உங்களுக்கு வயதாகி விட்டது' என எப்பொழுது வெறுப்புடன் உங்கள் மகன் கத்துகிறானோ, அப்பொழுது நீங்...

நோபெல் பரிசு பெற்ற எழுத்தாளர் Louise Gluck அவர்களின் A fantasy எனும் கவிதை என் மொழிமாற்றத்தில்

Image
ஒரு கனவு லூயிஸ் க்ளக் தமிழாக்கம் : அரவிந்த் வடசேரி நான் உங்களுக்கு ஒன்று சொல்கிறேன்: தினமும் யாராவது இறக்கிறார்கள். அது ஒரு ஆரம்பம் மட்டும் தான். ஒவ்வொரு நாளும் மயானங்களில் புதிதாக விதவைகள் பிறக்கிறார்கள், புது அனாதைகள். அவர்கள் தலையினை கையில் தாங்கி அமர்ந்திருக்கிறார்கள், தங்கள் புது வாழ்வினை முடிவு செய்ய முயன்றபடி. அவர்களில் சிலர் முதல் முறையாக வருகிறார்கள் மயானத்திற்கு. அவர்கள் அழக்கூட பயந்தவர்களாயிருக்கிறார்கள், சில நேரங்களில் அழாமலிருப்பதற்கும். யாரோ அவர்களின் காதில் கிசுகிசுக்கிறார்கள் அடுத்ததாக என்ன செய்ய வேண்டுமென்று, சில மந்திரங்களை உச்சரிக்க அல்லது திறந்திருக்கும் குழியில் ஒரு பிடி மண் அள்ளிப்போட. அதன் பிறகு அனைவரும் அவள் வீட்டிற்கு வருகிறார்கள், திடீரென வீடு முழுக்க ஆட்கள் நிறைந்திருக்கிறார்கள். விதவை கட்டிலில் அமர்ந்திருக்கிறாள், வெகு பாங்காக, வந்தவர்கள் வரிசையாக அவளிடம் வரத் தோதாக, சிலர் அவள் கையினை பற்றிக்கொள்கின்றனர், சிலர் மென்மையாக அணைக்கின்றனர். அவளிடம் அனைவருக்கும் சொல்ல ஏதோ ஒன்றிருக்கிறது, நன்றி, உதவிக்கு ந...
Image
நிதர்சனம் அரவிந்த் வடசேரி கடிபட்ட நாயாய் முடங்கிக் கிடக்கிறது மனம் காயங்களை நக்கியபடி. வீராப்பாய் விரட்டிச் சென்று வேண்டிப் பெற்றவை பல, வழிமறிக்கும் விதியிடம் உரிமை கோரி உரசியதில் சில, அன்பென்று அடங்கிப்போய் அவமதிப்பாய் கொஞ்சம், அடுத்தவன் சினம் தீர்க்க கிடைத்தன இன்னும் சில, அற்பமாம் ஆசையின் அவதியாய் மீதம். அப்பொழுது மட்டுமே வெற்றியும் தோல்வியும். எப்பொழுதும் இருப்பதோ ஈ மொய்க்கும் புண்களும் வலி தரும் வடுக்களும்.

டச் ஸ்கிரீன் - கல்பட்டா நாராயணன் அவர்களின் மலையாளக்கவிதையின் என் மொழிமாற்றம்

Image
டச் ஸ்க்ரீன் அசல் : கல்பட்டா நாராயணன்-மலையாளம் மொழிமாற்றம் - அரவிந்த் வடசேரி தழும்பேறிய விரலாக இருந்தும் எவ்வளவு அழுத்தினாலும் வேலை செய்யவில்லை. "டச் ஸ்க்ரீன் டாடி, மெதுவாக அழுத்தினால் போதும் அழுத்தக்கூட வேண்டாம் சும்மா தொட்டால் போதும். உண்மையைச் சொன்னா தொடக்கூட வேண்டாம்- இதோ இப்படி." அவன் விரல் தண்ணீரின் மேல் இயேசுவைப் போல நகர்ந்தது. ஆசைப்படி இயங்குகிறது உலகம். உலகம் வசப்படாதிருந்ததன் காரணம் இது தானோ? நான் தேவைக்குமேல் பலம் பிரயோகித்திருந்தேனோ? என்னளவு புத்தியோ பலமோ இல்லாதவர்களை நான் விரும்பியவற்றை விரும்புவது கண்டு வீணாக வருத்தப்பட்டேன். எதிரிகளுக்கெல்லாம் ஏன் எல்லாமே எளிதாக்குகிறாய் என இறைவனிடம் வருத்தப்பட்டேன். மேற்பரப்பில் எடை இல்லாமல் நகர என்னால் முடியவில்லை. முதல் அடியிலேயே நான் நீரில் மூழ்கிவிட்டேன். பூக்கள் மலர்வது யாராவது பலம் பிரயோகிப்பதாலா? நான் மட்டும் பழுதடைந்த மின்விசிறி சுற்றுவதைப்போல ஓசையுடன் மலர்ந்தேன். நெற்றிவியர்வையை அதிகமாக கொதிக்கவிட்டு அப்பம் வேகவைத்தேன். அதுவோ ஐயாயிரம் போகட்டும் ஐந்து கூட தேறவில்...

பாபேல் - கவிதை - மலையாள மூலம் :கல்பட்டா நாராயணன்-(അച്ഛനും മകളും)-தமிழாக்கம் : அரவிந்த் வடசேரி

Image
அப்பா: மொபைல் மார்போடணைத்துறங்கும் மகளின் முகத்தின் நிறைவு என்னை பயம் கொள்ளச் செய்கிறது. எந்த ஒரு மரத்திலும் நிலத்திலும் நிலைக்காத என் பலசெல் உயிரி ஒரு செல் உயிரியாக தனக்குள் முடங்கிக் கொண்டதோ? பல காலத்து அலைச்சலுக்குப் பின் துவக்கப் புள்ளிக்கே திரும்பி வந்ததோ? பற்பல ஜன்மங்களினூடே அப்பா காண்கிறேன் பயன்பாடு குறைந்து குறைந்து உன் கைகால்கள் மெலிந்து வருவது! ஒரு விரலும் துடிப்புமாக நீ சுருங்குவது. அண்மைக்காலமாக நான் பார்க்கிறேன் நீ நடக்காமலே உன் வேலைகள் நடப்பது வகுப்புக்குச் செல்லாமலே தேர்வுகளில் நீ வெல்வது வங்கிக்குச் செல்லாமலே வர்த்தகம் செய்வது. நெருப்பின்றி நீரின்றி நெல் இன்றி சமைப்பதும், விதைக்காமல் அறுப்பதும், எங்கேயும் செல்லாமல் எங்கும் இருப்பதும். எல்லாமும் எதுவுமில்லாமல் நடக்கின்றன. இருந்த இடத்திலிருந்தே உறவு பூணுகிறாய் இருந்த இடத்திலிருந்தே உறவு முறிக்கிறாய் பொது இடங்களை வெறிச்சோடச் செய்கிறாய் பாட்டரங்குகளை மோனத்தில் மூழ்கடிக்கிறாய் உழைப்பை உதாசீனம் செய்கிறாய் எச்சிலாய்ப் போன காலத்தை துச்சமாய்ப் போன தூரத்தை விரலால் சுண்டி விசிறுகிறாய். ...