காணெக்காணெ மலையாள திரைப்படம் - என் பார்வை

காணெக்காணெ

திரைப்படம் - மலையாளம்

திரைச்சுவை : அரவிந்த் வடசேரி

மகள் இறந்து இன்னும் ஓராண்டு நிறைவடையவில்லை. வேலை நிமித்தமாக மாப்பிள்ளையின் வீடு இருக்கும் நகரத்திற்கு வரும் மாமனார் பேரனைக் காண வீட்டிற்கு வருகிறார். அழகான வீடு. அவனின் இரண்டாவது மனைவியும் அழகி தான். கர்ப்பத்தின் அசதி அவளின் அழகை மேலும் மெருகேற்றியிருக்கிறது. நன்றாகவே உபசரிக்கிறாள்.

பள்ளிக்குச் சென்ற பேரன் வருகிறான். அம்மாவும் பிள்ளையும் அவ்வளவு அன்னியோன்னியமாக பழகுகின்றனர். பேரனுடன் கிடைத்த சிறுது நேர தனிமையில் வினவுகிறார்,

“உனக்கு அம்மாவ ஞாபகம் இருக்கா?”

“அதெப்படி மறக்கும்? நான் தான் தினமும் பார்க்கிறேனே?”

மருமகன் வருகிறான், புது மனைவியின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கான ‘கேக்’குடன். அவளின் அம்மாவும் அப்பாவும் வருகிறார்கள் மாலையில் பிறந்த நாள் கொண்டாட. அனைவரும் மகிழ்ச்சியாய் இருக்கின்றனர். பெண்ணை இழந்த தகப்பனைத் தவிர. இன்னொரு பிறந்த நாள் கொண்டாட்டத்தின் நினைவுகள் அவனை வதைக்கின்றன.

இவ்வளவு போதாதா உங்களை கதையினுள் இழுத்துக் கொள்ள.

அவ்வளவு எளிதில் மறந்து விட்டானா? அதுவும் அவளின் சாவு ஒரு விபத்தின் காரணமாக இருக்கும்பொழுது. அது தான் கதை.

சஸ்பென்ஸ், டிராமா என சரி விகிதத்தில் கலந்து சிறப்பாக அமைத்திருக்கிறார்கள்.

தாத்தா பேரனிடம் கேட்கிறார்

“நீ என்னோட வந்திடு. அங்கே இதை விட நல்ல ஸ்கூல் இருக்கு. தினமும் நானே உன்னை கூட்டிகிட்டு போய் விட்டு திரும்ப அழைச்சுகிட்டு வருவேன்”
“அப்பா sad ஆவாரே ?”

“நானும் தனியா (sad ஆ) தானே இருக்கேன்?”

“நீங்க தனியா இருந்தா நான் sad ஆவேன். அப்பா sad ஆனா நான் ரொம்ப ரொம்ப sad ஆவேன். என்னை நீங்க நிர்பந்தமா கூட்டிகிட்டு போனா கண்டிப்பா நான் ஓடிப் போயிருவேன். இனிமே என்னை பாக்க வராதீங்க.”

மலையாளப் படங்களில் வசனம் சரியாக இருப்பது இயல்பு தான் போல.

நான் இரண்டு காட்சிகளில் மட்டும் சிறு மேம்படுத்துதல் பரிந்துரைப்பேன்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் அவங்க ரெண்டு பேரோட ஆதார் கார்டையும் ஒரு ஃபோட்டோ எடுத்துடுன்னு சாதாரணமா சொல்றார். அதுக்கு பதிலா ID proof னு சொல்லியிருக்கலாம்.

ஆபரேஷன் தியேட்டருக்கு லிஃப்ட் ல் பதட்டத்துடன் போகும்போது உடன் இருப்பவர்களும் மௌனமாக இருக்கிறார்கள். அந்த இடத்திலே ஏதாவது சிரித்துப் பேசுவதோ அரசியல் அல்லது சினிமா அல்லது அலுவலகப் பிரச்சனை ஏதாவது பேசுவது போல் இருந்திருந்தால் இன்னும் இயற்கையாக இருக்கும்.

நல்ல படம். Sonyliv லே இருக்கு.

Comments

Popular posts from this blog

ஜெயமோகன் அவர்களின் சிறுகதை இன்வெர்னெஸ் கட்டுடைத்தல்

நான் யார்? - ஸ்ரீ ரமணர் அருளியதன் எனது எளிய தமிழாக்கம்

உலகத் தாய்மொழி நாள் உரை