Skip to main content

Posts

நான் யார்? - ஸ்ரீ ரமணர் அருளியதன் எனது எளிய தமிழாக்கம்

நான் யார்? ஸ்ரீ ரமணர் அருளியதன் எனது எளிய தமிழாக்கம் அனைத்து மனிதர்களும் துன்பமென்பதில்லாமல் எப்போதும் இன்பமாயிருக்க விரும்புவதாலும், எல்லோருக்கும் தன்னிடத்திலேயே மிகுந்த பிரியமிருப்பதாலும், பிரியத்திற்கு இன்பமே காரணமாதலாலும், மனமற்ற உறக்கத்தில் தினமும் அனுபவிக்கும் இயல்பான அந்த இன்பத்தை அடையத் தன்னைத்தானே அறிதல் வேண்டும். அதற்கு நான் யார் என்னும் தேடுதலே முக்கிய வழிமுறை. 1. நான் யார்? ரசம்(நீர்ச்சத்து), ரத்தம், மாமிசம் , மேதஸ்(கொழுப்பு), அஸ்தி(எலும்பு), மஜ்ஜை மற்றும் சுக்ரம்(உயிர், ஊக்கம்) எனும் ஸப்த(ஏழு) தாதுக்களாலாகிய கண்ணுக்குத் தெரியும் உடல் நானல்ல. ஒலி , தொடுதல், பார்வை, சுவை, நாற்றமெனும் ஐந்து உணர்ச்சிகளை தனித்தனியே அறிகின்ற காது ,தோல் , கண்கள், நாக்கு, மூக்கு என்கிற ஐம்புலன்களும் நானன்று. பேச்சு, நடை, தானம், மலஜலம் கழித்தல், இன்புறுதல் என்னும் ஐந்து செயல்களையும் செய்கின்ற வாய், பாதம், கை, குதம், பிறப்புறுப்பு என்னும் செயற் உறுப்புகள் ஐந்தும் நானன்று. சுவாசம் முதற்கொண்ட ஐந்து பணிகளையும் செய்கின்ற பிராணன் தொடங்கி ஐந்து வாயுக்களும் நானன்று. நினைக்

நான் யார் - ரமணர்

நான் யார்? ஸ்ரீ ரமணர் அருளியது சகல ஜீவர்களும் துக்கமென்பதின்றி எப்போதும் சுகமாயிருக்க விரும்புவதாலும், யாவர்க்கும் தன்னிடத்திலேயே பரம பிரியமிருப்பதாலும், பிரியத்திற்கு சுகமே காரணமாதலாலும், மனமற்ற நித்திரையில் தினமனுபவிக்கும் தன் சுபாவமான அச்சுகத்தை யடையத் தன்னைத்தா னறிதல் வேண்டும். அதற்கு நான் யார் என்னும் ஞான விசாரமே முக்கிய சாதனம். 1. நான் யார்? ஸப்த தாதுக்களாலாகிய ஸ்தூல தேகம் நானன்று. சப்த, ஸ்பரிச, ரூப, ரஸ, கந்தமெனும் பஞ்ச விஷயங்களையும் தனித் தனியே அறிகின்ற சுரோத்திரம், துவக்கு, சக்ஷுஸ், ஜிஹ்வை, கிராணமென்கிற ஞானேந்திரியங்க ளைந்தும் நானன்று. வசனம், கமனம், தானம், மல விஸர்ஜ்ஜனம், ஆனந்தித்தல் என்னும் ஐந்து தொழில்களையும் செய்கின்ற வாக்கு, பாதம், பாணி, பாயு, உபஸ்தம் என்னும் கன்மேந்திரியங்க ளைந்தும் நானன்று. சுவாஸாதி ஐந்தொழில்களையும் செய்கின்ற பிராணாதி பஞ்ச வாயுக்களும் நானன்று. நினைக்கின்ற மனமும் நானன்று. சர்வ விஷயங்களும் சர்வ தொழில்களு மற்று, விஷய வாசனைகளுடன் மாத்திரம் பொருந்தியிருக்கும் அஞ்ஞானமும் நானன்று. 2. இவையெல்லாம் நானல்லாவிடில் பின்னர் நான் யார்? மேற்சொல

பேச்சு

கருத்தரங்க உரை அரவிந்த் வடசேரி கல்லூரிக் கருத்தரங்கில் என் பேச்சு அனைவருக்கும் வணக்கம்! இவ்வளவு பெருமைவாய்ந்த கருத்தரங்கில், பெரும் படைப்பாளிகள் பேசி சிறப்பித்துக் கொண்டிருக்கும் இந்த அரங்கில் எனக்கும் ஒரு வாய்ப்பு வழங்கியதற்காக அமைப்பாளர்களுக்கு என் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னைப் பேச அழைத்தபோது நான் தேர்வு செய்ததுதான் ‘மொழிபெயர்ப்பிலக்கியத்தில் அண்மைக்கால போக்குகள்’ எனும் இந்தத் தலைப்பு. கருத்தரங்கின் பொதுத் தலைப்பான “அண்மைக்கால இலக்கியம் : படைப்பும் வாசிப்பும்’ என்பதோடு பொருந்திப் போகிறதாக இதை நான் தெரிவு செய்தபோது பொதுவான நடைமுறை எனும் பொருளைத் தான் நான் எண்ணியிருந்தேன். அழைப்பிதழில் தலைப்பைக் கண்ட நண்பரொருவர் ‘நல்ல தலைப்பு, நீங்கள் நிறைய மொழி பெயர்ப்பு எழுத்தாளர்களை, படைப்புகளை அறிமுகம் செய்யலாம்’, என்றார். ஆனால் அதற்கு பரந்துபட்ட தொடர்ந்த மொழிபெயர்ப்பு வாசிப்பு அவசியம். நான் வாசிக்கத் தொடங்கிய நாட்களிலேயே மொழிபெயர்ப்பு என்று பிரித்துப் பார்க்காத ஒரு வாசிப்புச் சூழல் தான் அமைந்தது. முக்கியமாக அந்தக் காலத்து மாத்ருபூமி வார இதழில் வி எஸ் காண்டேக

என்னுரை-ஆவநாழி மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்

என்னுரை அரவிந்த் வடசேரி ஆவநாழி மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் தொகுப்பிற்கான 'என்னுரை' இது நான் முற்றிலும் எதிர்பாராத நிகழ்வு. ஓரிரு ஆண்டுகளுக்கு முன், என் பெயர் தாங்கி இப்படி ஒரு நூல் வெளிவரும் என்று யாராவது ஆரூடம் சொல்லியிருந்தால் நான் நகைத்துக் கடந்திருப்பேன். எனக்குப் பிடித்த கவிதைகளையும் துணுக்குச் செய்திகளையும் மலையாளத்திலிருந்தும் ஆங்கிலத்திலிருந்தும் மொழிமாற்றம் செய்து முகநூலில் பதிந்து கொண்டிருந்தேன். எனினும் அதுவோர் இலக்கியச் செயல்பாடு எனும் எண்ணம் ஏதும் இருந்ததில்லை. நான் வாசித்து மகிழ்ந்தவைகளை நட்புகளுடன் பகிர்ந்து மகிழ்வித்தல் என்பதாகத் தான் எண்ணம் கொண்டிருந்தேன். மொழிபெயர்ப்பின் இலக்கிய சாத்தியங்கள் குறித்து போதுமான விழிப்புணர்வற்றவனாகவே இருந்திருக்கிறேன் என்பதை இப்போது தான் அறிகிறேன்.        இப்பதிப்பின் வெளியீட்டாளர் எழுத்தாளர் சுதேசமித்திரன் தான் சிறுகதைகளை மொழிமாற்றம் செய்து ஆவநாழியில் வெளியிடலாம் எனும் யோசனையை முன்வைத்தார். அதற்கான முயற்சியில் ஈடுபட்ட பொழுதும்கூட நான் வாசித்து மகிழ்ந்த எழுத்தாளர்களின் கதைகளில் என்னை மிகவும் கவர்ந்தவற்றைத் தான் மொழிமாற்ற

நாஞ்சில் நாடன் அவர்களின் முன்னுரை - ஆவநாழி மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்

புத்தன் வாசனை நாஞ்சில் நாடன் அரவிந்த் வடசேரியின் ஆவநாழி மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் தொகுப்பிற்கு திரு நாஞ்சில் நாடன் அவர்கள் அளித்த முன்னுரை ‘ஆவநாழி’ கலை இலக்கிய இரு திங்கள் மென்னிதழ் வெளியிட்ட, அரவிந்த் வடசேரி மொழி பெயர்த்த, எட்டுச் சிறுகதைகளும் மூன்று குறுங்கதைகளும் இவண் தொகுப்பாகி உள்ளன. இக்கதைகளில் ஒன்று ஆங்கில மூலம். பிறவெல்லாம் மலையாள மூலம். கதாசிரியர் எண்மரே! காரணம் வி.கே.என். எழுதிய இரு கதைகள் உண்டு.       வி.கே.என். பேப்பூர் சுல்தான் வைக்கம் முகமது பஷீர் போன்று மலையாளத்தில் புகழ்பெற்ற அங்கதக் கதைகள் படைத்தவர். வி.கே.என். எனக்கு அறிமுகமானது, மாத்ருபூமி மலையாளத் தினசரியில் கோவை எடிட்டராக இருந்த விகடகவி, சிறுகதை எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஊடகவியலாளர் விஜயகுமார் குனிசேரி மூலம், முப்பது ஆண்டுகள் முன்பு. மலையாளத்தில் பையன் கதைகள் எனும் பொதுத் தலைப்பில் வி.கே.என். எழுதிய எழுபத்து மூன்று கதைகள், அதே தலைப்பில் எழுநூற்று ஐம்பது பக்கம் கொண்ட நூலாகத் தமிழிலும் வெளிவந்துள்ளது. மொழிபெயர்ப்பு மா.கலைச்செல்வன், வெளியீடு சாகித்ய அகாதெமி.        கொண்டாடப்படுகின்ற நமது சமகால மதிப்பீ

இருவாட்சி இதழில் வெளியான என் சிறுகதை. ஓவியம் : ஜீவா அவர்கள்

ஏறு தழுவுதல் சிறுகதை-அரவிந்த் வடசேரி ஓவியம் -ஜீவா மணி ஆறைத் தாண்டி விட்டது. மற்ற வண்டிகளிலும் வியாபாரம் மந்தமாகத் தான் இருந்தது. வெகு நாட்களாக இருக்கும் சிவக்குமார் அண்ணன் வண்டியினைச் சுற்றி மட்டும் வழக்கம் போல் கொஞ்சம் வாடிக்கையாளர்கள் நின்றிருந்தார்கள். இன்னும் இரண்டு மணி நேரத்திற்கு மேல் இருக்கிறது கடை அடைக்க. நேற்றை விடவும் இன்று வியாபரம் குறையாமல் இருந்தாலே போதும். வண்டி தள்ளத் துவங்கி ஒரு மாதம் கடந்து விட்டது. ஏதோ தட்டுத் தடுமாறி நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கிறது. அதற்கு முன் ப்ரூக்ஸில் தான் வேலை. கொரோனா காரணமாக மால் மூடப்பட்ட பொழுது இவ்வளவு நாள் நீடிக்கும் என நினைக்கவில்லை. ஒரு வாரம் அல்லது இரண்டு வாரத்தில் திறந்து விடுவார்கள் என்று தான் நம்பியிருந்தார்கள். முதல் மாதம் வேலை செய்த நாட்களுக்கான சம்பளத்தை விட கொஞ்சம் அதிகமாகத் தான் தந்தார்கள். பிறகு அவர்களும் தரவில்லை, நானும் கேட்கவில்லை.       இரண்டு மாதம் முன் வரை, எப்படியோ, இலவச உதவிகள் கொண்டு தாக்கு பிடிக்க முடிந்தது. பிறகும் நிலைமை சீராகும் வாய்ப்பே தெரியாததால் ஏதாவது செய்தே ஆக வேண்டும் எனும் எண்ணம் மனதை அரித்துக் கொ